பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்த்த பஞ்சகம்

3


அறிய வேண்டிய 'அர்த்த பஞ்சக ஞானம்' இல்லாமல் எவ்வளவு கற்றாலும் அக்கரையைச் சேர ஒருவராலும் இயலாது என்பது உறுதி. இதுவே வைணசமயத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.1

இந்தச் சிறிய கற்பனைக் கதையை என்றும் சிந்தித்துக் கொண்டே இருந்தால் உண்மை நிலை ஒருவாறு புரியும்.

***

சம்சாரிகள் பகவானுக்கு அடிமைப்பட்டு இருத் தலையே (சேஷப்பட்டு இருத்தலையே) இலட்சணமாக உடைவர்கள். இவர்களுக்குப் பகவான் 'நிருபாதிக சேஷியாக'2 உள்ளவன். இந்த இரண்டு நிலைகளையும் சம்சாரிகள் மறந்தார்கள். இங்ஙனம் அவர்கள் மறந்ததனால் பகவானுக்குத் தாங்கள் புரிய வேண்டிய கைங்கரியமாக (அடிமை செய்தல் ஆகிற) சிறந்த பலத்தையும் (புருஷார்த்தததையும்) இழந்தார்கள்; இந்த முறையில் "ஈசுவரனுடைய தொண்டிற்கெனவே தோன்றிய நாம் எம்பெருமான் கைங்கரியத்தை இழந்துவிட்டோமே!" என்னும் கிலேசம் சிறிதும் இன்றியே சம்சாரம் என்னும் பெருங்கடலிலே விழுந்து ஆத்யாத்மிகம3, ஆதிபெளதிகம்4, ஆதிதைவிகம்5

____________________________________

1. இந்தச் சிறு வரலாற்றை எனது அரிய, நண்பர் அரங்க சீநிவாசன் எழுதிய 'அறிய வேண்டிய ஐம்பொருள்' என்ற நூலில் கண்டது. பக்கம் 11 முதல் பக்கம் 13.

2. நிருபாதிக சேவி - ஒரு காரணமும் இல்லாமல் ஆட்கொள்பவன். அஃதாவது, உயிர்களுக்கு இயற்கை வழியினாலேயே தலைமை பெற்றவன்

3. ஆத்யாத்மிகம் : நம் உடலையும் மனத்தையும் பற்றிவரும் துன்பங்கள். இது சரீர ஆத்யாத்மிகம், மன ஆத்ய த்மிகம் என இருவகைப்படும். முன்னது உலகைப்பற்றிக் கொண்டுவரும்.