பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
அர்த்த பஞ்சகம்
 


என்னும் மூவகைத் துன்பங்களால் உழன்று கொண்டு இருந்தார்கள்.

அறிவுடைய சேதநர் இங்ஙனம் வினைகளால் சுழன்று கொண்டு தம் காலத்தைப் பயனற்ற வழியில் கழித்தல் பரமகருணா நிதியாகிய பகவானுக்குப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆதலின் அநாதியாய் எல்லாப் பொருள்களோடும் இரட்சகன் - இரட்சியன் என்னும் சம்பந்தம் உடைய பகவான், இச்சேதநர்கள் தங்கள் நிலையையும், தன்னுடைய நிலையையும் அறிந்து, தானாகிற (பகவானாகிற) மரக்கலத்தைக் கொண்டு தங்கள் பிறவியாகிய பெருங்கடலைக் கடந்து வீடாகிய அக்கரையை அடைதலுக்கேற்ற அறிவைத் தருவதற்காகத் தானே சீடனுமாகவும் ஆசாரியனுமாகவும் நின்று அநாதியானதும் அர்த்த பஞ்சகத்தைச் சுருக்கமாய்த் தெரிவிப்பதுமான திருமந்திரத்தை வெளியிட்டு அருளினான்.

இந்தச் சம்சாரிகள் யாவர்? அநாதிகாலமாய் ஏற்பட்டு இருக்கும் உடல் தொடர்பினால் பொருளில் வேறுபட்டு இருப்பினும் முன்பிருந்த பெயரோடும், உருவத்தோடும் வருகின்ற அவித்தியை6 கருமம்7, வாசனை8,

____________________________________

தலைவலி, காய்ச்சல், குட்டம், இருமல் முதலிய பிணிகள்; பின்னது காமம், குரோதம், பொறாமை முதலிய குணங்கள்.

4. ஆதிபெளதிகம் - பிசாசம், தீய பிராணிகள், மனிதர், இராக்கதர் முதலியவர்களால் நேரிடும் துன்பங்கள்.

5. ஆதிதைவிகம் - காற்று, மழை, வெயில், இடி, மின்னல் முதலியவற்றால் தெய்வ் சங்கற்பமாய் உண்டாகும் துன்பங்கள்.

6. அவித்தியை - அஞ்ஞானம். உடலையே ஆன்மா என்று எண்ணும் நினைவும், தான் ஈசுவரனுக்குச் சேஷப்பட்டவன் அல்லன், தனக்காகவே இருப்பவன் என்னும் அபிமானமும் ஆகும்.