பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

11


அவை 'நிரூபித சொரூப விசேஷணம் எனப்படும். (எ-டு) மலருக்கு மணம்சொரூப நிரூபக விசேஷணம். அதிலுள்ள நிறம் முதலியன நிரூபித சொரூப விசேஷணம்.

எம்பெருமானுடைய சொரூபத்தை சத்தியத்துவம், ஞானத்துவம், அநந்தத்துவம், ஆநந்தத்துவம், அபலத்துவம் என்ற ஐந்து குணங்களைக் கொண்டே விளக்க வேண்டும். ஆதலின் இவ்வைந்தும் சொரூப நிரூபக விசேஷணமாகும்.

1. சத்தியத்துவம்: எப்பொழுதும் மாறுபடாத தன்மை.

2. ஞானத்துவம்: எப்பொழுதும் குறைவுபடாத ஞான சொரூபனாம் தன்மை.

3. அகந்தத்துவம்: 'இங்குத்தான் இருக்கின்றான்' என்று தேசத்தாலும், 'இப்பொழுதுதான் இருக்கின்றான்' என்று காலத்தாலும் 'இந்தப் பொருளின் சொரூபமாகத்தான் இருக்கின்றான்' என்று பொருளினாலும் அளவிடமுடியாதபடி எவ்விடத்திலும் எக்காலத்திலும் எந்தப் பொருளின் சொரூபமாகவும் நிற்கும் தன்மை.

4. ஆகந்தத்துவம் : ஆநந்த சொரூபனாய் நிற்கை.

5. அமலத்துவம் : குற்றங்கள் இல்லாத தன்மை.

இந்த ஐந்து குணங்களால் எம்பெருமானது சொருபத்தை ஒருவாறு அறிந்தபின் செளலப்பியம், செளசீல்யம், வாத்சல்யம், காருண்யம் முதலிய எண்ணற்ற திருக்கல்யாண குணங்கள் அவன் பெருமையைக் காட்டுகின்றன. இவை நிரூபித சொரூப விசேஷணமாகும். இத்தகைய சொரூபம் திருக்கல்யாண குணம் முதலியவற்றைக் கொண்ட எம்பெருமான் பிரகிருதி மண்டலமாகிய லீலா விபூதியையும், வைகுண்டமாகிய நித்திய