பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


li அர்த்த பஞ்சகம் நிற்பதொரு பெருநீர் நிலைபோல் இருப்பதால் தன்னைக் கிட்டினவர்கட்கு எல்லாத் தாபங்களையும் போக்கவல்ல தாய் இருப்பது. பலபல அவதாரங்கட்கும் மூலக்கிழங் காய் இருப்பது. செல்வத்தை விரும்புவோர் (ஐசுவர் யார்த்திகள்), ஆ ன் மா அநுபவத்தை விரும்புவோர் (கேவலர்), கர்மஞான பக்திகளால் பகவானை அடை வோர் (உபாசகர்). பிரபத்தியில் பகவானை அடைவோர் (பிரபந்தர்), நித்தியர், முக்தர் ஆகிய எல்லோருக்கும் காப்பாய் இருப்பது. நித்திய விபூதி, லீலா விபூதியிலுள் ளார்க்கும் அடையத்தக்கதாய் இருப்பது. திவ்வியாயுதங் களாலும் திவ்விய ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றிருப்பது. ஐந்து நிலைகள் : எப்பெருமானின் திருமேனி பரத் துவம் என்றும், வியூகம் என்றும், விபவம் என்றும், அந்தர்யாமித்துவம் என்றும், அர்ச்சாவதாரம் என்றும் ஐக்து வகையோடு கூடிவிருக்கும். 1. பாத்துவம் : பரத்துவம் என்பது, காலம் நடை யாடததும், ஆனந்தம் அளவிறத்து ஒப்பற்றதாயும் உள்ள பரமபதத்தில் (நித்திய விபூதியில்) அயர்வறும் அமரர்கள் என்று வழங்கப்பெறும் அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) முதலிய நித்தியசூரிகளும், இந்த உலகத் தளைகளினின்றும் விடுபட்ட முத்தரும் அநுபவித் தற்கு உரியனாய் இருக்கும் இருப்பு. கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்துள்ளே வெண்பல் அலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன் சுடர்முடியன் கான்கு தேடி என குனிச சுங்கன் ஒண்சங்கு கதைவாள் ஆழியான் ஒருவன் (திருவாய் 8-8:7)