பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 அர்த்த பஞ்சகம் தற்காகவும், சம்சாரிகட்கு வேண்டியவற்றை ஈந்து வேண்டாதவற்றைப் போக்கி அவர்களைக் காத்தற் பொருட்டும், மோட்சத்தை விரும்பி, தன்னை இடை யறாது நினைப்பவர்கட்கு (உபாசிப்பவர்கட்கு) அவர்தம் தளைகளைப் போக்கித் தன்னை வந்து அடைவதற்குக் காரணமான பேரருளைச் சுரப்பதற்காகவும், வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்னன். அகிருத்தன் என்ற பெயர் களுடன் இருக்கும் நிலையைாகும். இந்நிலையைத் திருமழிசையாழ்வார், 'ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர் போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்திளண்ணில் மூர்த்தியாய் நாகமூர்த்தி சயனமாய் தலங்கடற் கிடந்துமேல் ஆக மூர்த்தி யாயவண்ணம் என்கொலாதி தேவனே - திருச்சந்த-17 என்ற பாசுரத்தில் குறிப்பிடுவர். இதில் ஏகமூர்த்தி என்பது, பரவாசுதேவனை. மூன்று மூர்த்தி என்பது, சங்கர்ஷணன், பிரத்தியுமனன், அநிருத்தன் ஆகிய அவ தாரங்களைக் குறிப்பிடுவது. நாலு மூர்த்தி என்பது பிரதானம், புருடன் (சீவான்மா) அவ்யக்தம் (நுண்நிலை) காலம் என்ற தத்துவங்களாகும். போகமூர்த்தி என்பது, போகத்திற்குத் தகுதியாகயுள்ள (அர்ஹமான) வடிவம். புண்ணியத்தின்மூர்த்தி என்பது, புண்ணியமே வடிவு கொண்ட ஒர் உருவம். நாகமூர்த்தி என்பது அனந்தமீது 'உறங்கு வான்போல் யோகு செய்யும் பெருமான்' (திருவாய் 5-4:11). இதனைத் திருமங்கையாழ்வாரும்,