பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

19


தன்னாலே தன் உருவம்
பயந்த தானாய்த்
தயங்குஒளிசேர் மூவுலகும்
தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில்
மூர்த்தி மூன்றாய்த்
தான்ஆயன் ஆயினான்

- பெரி, திரு. 6-6:9

என்று குறிப்பிடுவார். நம்மாழ்வாரும்,

ஏக மூர்த்தி இருமூர்த்தி
மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய்
இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடனுள்
துயின்ற நாரா யணனே!

- திருவாய் 4. 3:3

என்றும் போற்றி மகிழ்வார்.

இவற்றுள், வாசுதேவ ரூபமான பரத்துவத்தில் ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்ற ஆறு குணங்களும் நிறைந்திருக்கும். ஏனைய மூன்றில் அவரவர் மேற்கொண்ட செயலுக்குத் தக்கவாறு ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு குணங்கள் விளக்கமாக இருக்கும்.

சங்கர்ஷணரானவர் ஞானம், பலம் என்ற இரண்டு குணங்களோடு கூடியிருப்பார். இவர் பிரகிருதிக்குள் (மூலப் பகுதிக்குள்) உருமாய்ந்து கிடக்கும் உயிர்த் தத்துவத்திற்குத் தலைவனாக நின்று (அதிட்டித்து) அவனைப் பிரகிருதியினின்றும் வேறாக்கி பிரத்தியும்ன நிலையையும் அடைந்து வேதம் முதலிய சாத்திரங்களை வெளியிடுவதையும் உலக அழிப்பையும் செய்பவராக