பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அர்த்த பஞ்சகம்


இருப்பார். மதுகைடவர் என்ற அசுரர்கள் நான் முகனிடமிருந்து வேதங்களைப் பறித்துக்கொண்டு கடலில் மூழ்கி மறைந்துவிட, ஞான ஒளியைத் தரும் பெருவிளக்கான நான்மறைகள் ஒழிந்தமை காரணமாக உலகெங்கும் பேரிருள் மூடி நலியா நின்றது. அவ்வமயம் சங்கர்ஷணன் கடலில் புகுந்து அவ்வசுரர்களைத் தேடிக் கண்டறிந்து கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து அன்ன உருவ மாய் நான்முகனுக்கு உபதேசித்தருளினன். இவ்வரலாற்றைத் திருமங்கை மன்னன்,

முன் இவ்ஏழ் உலகுணர்வு இன்றி இருள்மிக
உம்பர்கள் தொழுதேத்த
அன்னம் ஆகிஅன்று அருமறை பயந்தவனே

-பெரி. திரு 5.3:8

என்று குறிப்பிடுவர். உலக அழிப்பினைப் பேயாழ்வார்,

பாலகனாய் ஆலிலைமேல்
பைய உலகெல்லாம்
மேல்ஒருநாள் உண்டவனே

-மூன். திருவந், 33

என்று பேசுவர். நம்மாழ்வாரும்,

அடியார்தம் வையமுண்டு ஆலிலை
அன்ன வசஞ்செய்யும்
படியாதும் இல்குழ விப்படி
எந்தையி ரான்தனக்கு

- திருவாய் 4. 3:10

என்று குறிப்பிட்டு மகிழ்வர்.

பிரத்தியும்னரானவர் ஐசுவரியம், வீரியம் என்ற இரண்டு குணங்கள் பொருந்தி இருப்பவர். இவர் ஞானத்திற்கு ஊற்றுவாயான மனம் என்ற தத்துவத்திற்குத் தலை