பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 அர்த்த பஞ்சகம் அறிகுறியாக வைணவர்கள் தம் உடலில் துவாதசமாகத் திருமண் காப்பிட்டுக் கொள்வர். இந்தப் பன்னிரு திருமண்காப்பும் வைணவர் திருமேனி யில் மேற்சொன்ன பன்னிருவரும் அதிட்டித்திருக்கும் இடங் களைக் குறிக்கும், நெற்றியில் கேசவன் பொன்மயமாய் நான்கு புயங்களிலும் நான்கு திருவாழிகளைத் தரித்துக் கொண்டு பெரிய பிராட்டியாருடன் சேவை தந்து நிற்பன். வயிற்றில் நாராயணன் நீலமேக சாமளனாய் நான்கு சங்கங்களைக் கொண்டு அம்ருதோத்பவை பிாாட்டி யாருடன் சேவை பாலிப்பன். மார்பில் மாதவன் இந்திர நீல இரத்தினநிறமுடன் நான்கு கதைகளைக் கொண்டு கமலைப் பிராட்டியாரோடு சேவை தருவன். கண்டத்தில் கோவிந்தன் சந்திரகாந்தியோடு நான்கு சார்ங்கங்களைக் கொண்டு சாதுதேவி (சந்திரசோப நீ) பிராட்டியாருடன் காத்தருள்வன். வலப்புற வயிற்றில் விஷ்ணு தாமரைப் பூந்தாதின் காந்தியோடு நான்கு ஹலாயுதங்களைப் பிடித்த வனாய் விஷ்ணு பத்தினிப் பிராட்டியாரோடு சேவை சாதிப்பன். வலப்புயத்தில் மதுசூதனன் தாமரைப்பூவின் காந்தியோடு நான்கு முசலங்களைக் கொண்டு வைணவப் பிராட்டியாரோடு சேவை தந்தருள்வன். வலப்புறக் கழுத்தில் திரிவிக்கிரமன் அக்நிகாந்தியோடு நான்கு கட்கங் களைக் கொண்டு வராரோஹினிப் பிராட்டியாரோடு சேவை தந்தருள்வன். இடப்புற வயிற்றில் வாமனன் இள ஞாயிற்றின் நிறத்தோடு நான்கு வச்சிராயுதங்களைக் கொண்டு அரிப்பிரியைப் பிராட்டியாரோடு கருணை செய் வன். இடப்புயத்தில் சிரீதரன் தாமரையின் காந்தியோடு நான்கு வாள்களைக் கொண்டு சார்ங்கினிப் பிராட்டி யாரோடு கிருபை செய்தருள்வன், இடப்புறக் கழுத்தில் இருடிகேசன் மின்னற் காந்தியோடு நான்கு உழலைத் தடி களைக் கொண்டவனாய் தேவதேவிப் பிராட்டியாரோடு தயை செய்தருளிப்பொலிவன். முதுகடியில் பதுமநாபன் சூரிய ஒளியுடன் நான்கு பஞ்சாயுதங்களைக் கொண்டு