பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஈசுவரனின் இயல்பு 25. களகரமான திருமேனியுடன் எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவனாய், பெரிய பிராட்டியாரோடு கட்டைவிரல் அளவாக ஒவ்வொருவர் இதய கமலத்துக் குள்ளே எழுந்தருளி யிருக்கும் இருப்பே இந்நிலையாகும். இந்நிலையை ஆழ்வார், யான்ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான்ஒட்டி வந்துனன் தனிகெஞ்சை வஞ்சித்து ஊன்ஒட்டி நின்றுனன் உயிரில் கலந்து - திருவாய் 1.7:7 என்றும், யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருக்து தீதுஅவம் கெடுக்கும் அமுதம் - டிெ 2.7:1 என்றும், வெள்ளைச் சுரிசங்கொடு ஆழிஏந்தி தாமரைக் கண்ணன் என் கெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் srreញុំ - டிெ7.3:1 என்றும் தம் பாசுரங்களில் குறிப்பிடுவர். இவற்றிற் கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், கல்லும் கனைகடலும் வைகுங்த வான்காடும் புல்லென்று ஒழிந்தனகொல் ஏபாவம் - வெவல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்து அகம். - பெரி.திருவந். 68