பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஈசுவரனின் இயலபு 27 மணவாளனின் திருமேனியில் ஈடுபட்ட தொண்ட ரடிப் பொடிகள், இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் - திருமாலை-2 என்று கூறிப்போந்தார். பக்திசாரர் என வழங்கப்பெறும் திருமழிசையாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதனின் ஓர் உரையாடலையே நிகழ்த்துகின்றார். எம்பெருமானின் சயனத் திருக்கோலத்தில் ஈடுபட்டு, - கடந்த கால்கள் கொங்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய் இடங்த மெய்கு லுங்கவோ? விலங்கு மால்வ ரைச்சுரம் கடந்த கால்ப ரந்தகா விரிக்க ரைக்கு டக்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி . - திருச்சந்த-16 என்று சயனத்திருப்பதற்குக் காரணம் வினவுகின்றார். இவரது பக்திப் பெருக்கில் திளைத்த எம் பெருமானும் இருவருக்கு மறுமொழி தருவான்போல் எழுந்திருக்க முயல அந்த அழகில் சிறுமாமனிசரின்’ (திருவாய் 8 , 10 : 3) கண் எச்சில் படும் என்று அஞ்சிய ஆழ்வார் 9. இந்த இடத்தில் தில்லைச் சிற்றம்பலவனின் திருமேனி அழகினைக் காணப்பெற்றால் 'மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' (4, 81 : 4) என்ற அப்பர்பெருமானின் திருவாக்கை நினைவு கூரச் செய்கின்றது.