பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அர்த்த பஞ்சகம்


உடனே "வாழி, கேசவனே!" என்று கூற பெருமாளும் தலையைத் தூக்கியபடியே இருந்து அவருக்குச் சேவை சாதித்தானாம். அந்நிலையிலேயே இன்றும்சேவைசாதித்து வருகின்றான். திருக்குறுங்குடி நம்பியின் பேரழகினைக் கண்டு பாராங்குச நாயகி, பரகால நாயகி இவர்களின் நெஞ்சு பறிபோனதை அவ்வவ்வாழ்வாரின் பதிகம் நன்கு விளக்குகின்றது. இந்த அச்சாவதாரத்தை மங்களா சாசனம் செய்வதற்காகவே அவதரித்த திருமங்கையாழ்வார் நூற்றெட்டு திவ்விய தேசங்களில் வடச்பேதரியிலிருந்து தெற்கே திருக்குறுங்குடி வரையிலுள்ள எண்பத்தாறு திவ்விய தேசங்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின்மீது மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருவாய் மொழி

திருவாய்மொழியில் இறைவனது இயல்பு 'உயர்வற' (1.2) 'திண்ணன் வீடு' (2.2) 'அணைவது' (2.8): 'ஒன்றும் தேவும்' (4.10) என்ற நான்கு திருப்பதிகங்களில் நுவலப்பட்டிருப்பதாகவும் முன்னர்ச் சுட்டியுரைத்தோம். அதனை ஈண்டு விளக்குவோம்.

(1) ஆன்ம உபதேசம் : (உயர்வற'(1.1) என்ற திருவாய் மொழியில் இறைவனது இயல்புபற்றி தம் மனத்திற்கு உபதேசிக்கின்றார் ஆழ்வார்.

தேவர்கள் முதலியமற்றையோருடைய மேன்மைகள் முழுவதும் இல்லையென்று கூறும்படி மேன்மேல் உயர்ந்து கொண்டே செல்லுகின்ற நற்குணங்களையுடையவன் எவனோ, அவன் என்னிடத்திலுள்ள அறியாமையாவும் நீங்குமாறு பத்திநிலையை அடைந்த அறிவை நல்கினான்; அந்த அறிவைத் தந்தவன் எவனோ அவன் மறதி என்பது சிறிதுமில்லாத நித்தியசூரிகட்குத் தலைவன்: அந்த நித்திய சூரிகட்குத் தலைவன் எவனோ அவனுடைய எல்லாத்