பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

29




துன்பங்களையும் நீக்குகின்ற ஒளி பொருந்திய திருவடிகளைத் தொழுது பிறவிப் பெருங்கடலின்று எழுவாய். (1)

மனத்தின் குற்றங்களளெல்லாம் நீங்க, பின்பு மலர்ந்து மேலே எழுகின்ற மனத்தின் யோக ஞானத்தால் அறியப் படுகின்ற ஆன்மாவின் தன்மையினை உடையவன் அல்லன்; இந்திரியங்களால் அறியப்படுகின்ற உலகத்துப் பொருள்களின் தன்மையினையுடையவன் அல்லன்; எதிர்வு நிகழ்வு இறப்பு என்னும் முக்காலங்களிலும் தனக்கு ஒத்தாரை இல்லாதவன்; மிக்காரையும் இல்லாதவன்; ஞான ஆனந்தமயமாக இருப்பவன்; இத்தகைய இறைவன் என்னுடைய சிறந்த உயிராவான். (2)

“அதனை இல்லாதவன்' 'இதனையுடையவன்' என்ற இருதன்மையாலும் நினைக்க முடியாதவன்; காணப்படுகின்ற இந்த உலகமும், ஆகாயத்திலுள்ள தெய்வலோகங்ளும் முதலாக எல்லா உலகங்களிலுமுள்ள உயிரில் பொருள்களையெல்லாம் உடையவன்; உயிர்ப் பொருள்களையெல்லாம் உடையவன்; காணப்படுகின்ற எல்லா பொருள்களும் தானாக இருப்பவன். அவ்வாறு இருப்பினும் அப்பொருளின் குணங்களும் குற்றங்களும் தன்னைச் சாராமல் இருப்பவன்; இவ்வகையில் எல்லாப் பொருள்களையும் விட்டு நீங்காதவனாகி எங்கும் பரந்திருக்கின்ற அந்நற்குணங்களையுடைய ஒப்பற்ற இறைவனை நாம் சேர்கின்றோம். (3)

நாம் என்ற பெயர்ப்பொருளும், அவன் இவன் உவன் என்னும் ஆண்பாற் பெயர்ப் பொருள்களும், அவள் இவள் உவள் என்னும் பெண்பாற் பெயர்ப் பொருள்களும் தாம் அவர் இவர் உவர் என்னும் பலர்பாற் பெயர்ப் பொருள்களும் அது இது உது எது என்னும் ஒன்றன்பாற்பெயர்ப் பொருள்களும், அழிகின்ற பொருள்களும், இவை உவை அவை என்னும் பலவின்பாற் பெயர்ப் பெருள்களும், நல்ல பொருள்களும் தீய பொருள்களும் உண்டாகும்