பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3{} - அர்த்த பஞ்சகம் பொருள்களும், உண்டான பொருள்களும் ஆகி நின்ற எல்லாப்பொருள்களும் அவ்விறைவரேயாவர்." (4) முக்குணங்களின் வசப்பட்ட உலக மக்கள் தாம் தாம் அறிந்த அறிந்த வகைகளாலே, அந்த அந்தத் தேவர்களே இறைவர் ஆவர் என்று நினைந்து, அவர் அவர்களுடைய பாதங்களையே பற்றுக் கோடாக அடைவார்கள்; அவர் களால்அடையப்படுகின்ற அவ்வத் தேவர்களும், இறைவர் என்று கூறப் பெறுவதற்கு யாதொருகுறையும் இல்லாதவர் களாகவே இருக்கின்றார்கள்; காரணம் யாது? எனின்: அத்தேவர்கள் தங்களுடைய ஆகமங்களில் விதித்து வைத்த வழியால் அவர்களை வணங்குகின்ற மக்கள் தாம் தாம் விரும்பிய பலனைப் பெறும் படியாக, அத்தேவர்களுடைய உயிருக்குள் உயிராக நின்று திருமகள் கேள்வனான நாராயணன் திருவருள் புரிகின்றான் ஆதலால். (5) நிற்றல்-நில்லாமை, இருத்தல்-இராமை; கிடததல்கிடவாமை; திரிதல்-திரியாமை என ஒன்றற்கொன்று மாறுபட்ட தொழில்களையுடையவர் ஆதலால், எப் பொழுதும் ஒரே தன்மைகளையுடையவர் என நினைத் தற்கு அரியவர்; அப்படி நினைப்பதற்கு அரியவர் என்னும் தன்மை எப்பொழுதும் மாறுபடாமல் ஒரே நிலையோடு கூடியிருக்கின்றவர்; வேதங்களால் பரம்பொருள் இவரே என்று உறுதி செய்யப்பட்ட திடத்தையுடையவர்; அவர் என் தலைவர். (6) உலகங்களையெல்லாம் முடிவுக் காலத்தில் அழியச் செய்த இறைவன், திடமான ஆகாயமும் நெருப்பும் காற் றும் நீரும் நிலமும் ஆகிய இவற்றைக் காரணமாகக் 10. இங்குக் கூறப்பெறாத யாம் நான் யான் என்னும் பெயர்ப் பொருள்களையும், எவன் எவர் எவை என்னும் பெயர்ப் பொருள்களையும் உபலட்சணத்தாற். கொள்க.