பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஈசுவரனின் இயல்பு 3芷 கொண்டு படர்ந்த எல்லாப் பொருள்களும் தானே யாகி, அவ்வப் பொருள்கள்தோறும் உடலுக்குள் இருக்கின்ற உயிரைப் போன்று மறைந்து, எங்கும் பரந்தவனாய் ஒளி மிக்க வேதத்துள் தோன்றுகின்றவன் ஆவான்." (7) பிரமன் முதல் தேவர்களாலும் அறிவரிதான நிலை யினையுடைய மூலப்பகுதி தொடக்கமாகவுள்ள எல்லா வற்றுக்கும் சிறத்த காரணமாகி, பின் அவற்றையெல்லாம் அழித்த பராபரன், சிவனாக இருந்து ஒப்பற்ற முப்புரங் களையும் எரித்தழித்துப் பின் உலகங்களையெல்லாம் அழித்தும், பிரமனாக இருந்து தேவர்கட்கு ஞானத்தை உபதேசித்துப் பின் ஒரு காலத்தில் உலகத்தையெல்லாம் படைத்தும், அவ்விருவருடைய உயிர்களுக்குள் உயிராகத் தங்கியிருக்கின்றான். (8) இறைவன் உளன் என்றால் உன்ளவன் ஆவான்; அப் பொழுது உருவத்தோடு இருக்கும் இப்பொருள்களெல்லாம் அவனுடைய துால சரீரமாகும். இறைவன் இலன் என்றாலும் உள்ளவனேயாவான்; அப்பொழுது உருவம் இல்லானவாய் இருக்கும் இப்பொருள்கள் எல்லாம் அவ னுடைய சூக்கும் சரீரமாகும்; ஆதலால், உளன் என்றும் இலனென்றும் கூறப்படும் இவற்றைக் குணமாக உடை மையின், உருவமும் அருவமுமான தூல சூக்குமப் பொருள் களையுடையவனாய் எங்கும் ஒழிவில்லாதவனாகிப் பரந்து இருக்கின்றவனேயாவான். (9) உலகங்களையெல்லாம் கற்பாந்த காலத்து உண்டு காத்த தலைவன், பரந்திருக்கின்ற குளிர்ந்த மாக் கடலி லுள்ள ஒவ்வொரு நீர் அணுக்கள்தோறும் பரந்திருக்கின்ற அண்டம் இது என்று கூறும்படி பரந்திருக்கின்றான்; அவ்வாறே பூமி ஆகாயம் இவற்றிலும் எங்கும் பரந்து நிறைந்திருக்கின்றான்; மிகவும் சூக்குமமான உடல்கள் 11. இதில் சரீர-சரீரி பாவனை தோற்றுகின்றது.