பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அர்த்த பஞ்சகம்


தோறும் அவ்வுடலில் வசிக்கின்ற உயிர்கள்தோறும் கண் களுக்குத் தெரியாதவாறு மறைந்து பரந்திருக்கின்றான்.

(10)

பலசுருதிப் பாசுரத்திலும் (திருக் கடைக் காப்புச் செய்யுளிலும்) "திடமான ஆகாயமும், நெருப்பும், காற்றும், நீரும், மண்ணும் என்னும் இவற்றின் தன்மைகளான சிறந்த ஒலியும், தெறலும் (திறலும்), வலியும் தண்ணளியும், பொறுத்தலும் ஆகிய இவையாகி நின்ற இறைவன்" என்று குறிப்பிடுகின்றார்.

ஆக, முதற்பாசுரத்தில் இறைவன் நற்குணங்களையுடையவனாக இருத்தல், அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினையுடையவனாயிருத்தல் வேறுபட்ட திருமேனியை யுடையவனாயிருந்தல் ஆகிய இவற்றை அருளிச் செய்தார். இரண்டாம் பாசுரத்தில் மேற்கூறப்பட்டனவற்றிற்கெல்லாம் பற்றுக்கோடாகவுள்ள இறைவன், உயிர்ப் பொருள் உயிரில் பொருள் ஆகிய இவற்றின் தன்மைக்கு வேறுபட்டவன் என்று அருளிச் செய்தார். மூன்றாம் பாசுரத்தில் மோட்ச உலகத்தைப் போன்றே அவனுக்கு உரிமைப் பட்ட தன்மையால் அந்தரங்கமாய்த் தோற்றுகின்ற லீலா விபூதி யோகத்தை அநுபவித்தார். நான்காம் பாசுரத்தில் அந்த லீலா வீபூதியிலுள்ள பொருள் களனைத்தும் அவனுக்கு அதீனம் (உரிமை) என்றார். ஐந்தாம் பாசுத்தில் அவற்றை அளித்தலும் அவன் அதீனம் என்றார். ஆறாம் பாசுத்தில் தொழில் செய்தலும் செய்யா மையும் அவன் அதீனம் என்றார். ஏழாம் பாசுரத்தில் உடலுக்கும் உயிருக்குமுள்ள இலக்கணம் உலகிற்கும் இறைவனுக்கும் உண்டாகையாலே உலகிற்கும் அவனுக்கும் சொன்ன ஐக்கியத்திற்குக் காரணம் சரீரஆன்மபாவனை என்றார். எட்டாம் பாசுரத்தில் குத்ருஷ்டிகளை மறுத்தார். ஒன்பதாம் பாசுரத்தில் சூனியவாதியை மறுத்தார். பத்தாம் பாசுரத்தில் வியாப்திசெளகர்யத்தை