பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

33


அருளிச் செய்தார். இந்த விளக்கத்தாலே எம்பெருமானுடைய பரத்துவத்தை உறுதிப்படுத்தினவாய்நின்றார் என்பது அறியத்தக்கது.

(2) பரத்துவத்தை அவதாரத்தில் காட்டல் : 'திண்ணன் வீடு'(2.2) என்ற திருவாய்மொழியில் இது காட்டப் பெறுகின்றது.

என்றும் அழியாத பரமபதம் முதலான எல்லா உலகங்கட்கும் உரியவனாய், எல்லையற்ற நற்குணங்களையுடையவனாய், அக்குணங்களைக் காட்டி என்னை அடிமை கொண்டவனாய், இவ்வுலகம், தெய்வவுலகம் முதலிய எல்லா உலகங்களையும் ஒரு சேர உண்டவனாயுள்ள நம் கண்ணபிரானே உலகத்திற்கெல்லாம் களைகண்; அவனையல்லது களைகண் ஆவார் ஒருவரும் இலர். (1)

பிரமனது தலையனைக் கிள்ளியதனால் உண்டான பெரிய தீவினையானது விட்டு நீங்கும்படி, சிவனுக்குப் பிச்சையினைப் பெய்து அவனைக் காப்பாற்றிய கோகுலத்திற் பிறந்தார்க்கெல்லாம் வலிய ஆண் சிங்கத்தினையொத்த கண்ணனையன்றி உலகங்கள் ஏழிலுமுள்ள அவ்வவ் உயிர்கள் செய்த தீவினைகளையெல்லாம் போக்கி அவற்றை அருளோடு காப்பாற்றுகின்றவர் வேறு யாவர்? ஐயோ! பாவம்! இவ்வுண்மையினைக் கூறல் நம்மைச் சார்ந்ததாவதே? (2)

இடப வாகனத்தையுடைய சிவனையும், தாமரைப் பூவில் பிறந்த பிரமனையும், தாமரைப் பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியாரையும் வேறுபாடு இன்றி, அயர்வறும் அமரர்கள் தொழும்படி தனது திருமேனியில் வைத்து மேலேயுள்ள உலகங்களுக்கெல்லாம் மேலே செல்லும்படி வளர்ந்து உலகத்தை அளந்து கொண்ட அறப் பெரிய தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கூறத்தக்க வேறு தெய்வமும் உண்டோ? இல்லை. (3)

அ.-3