பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 அர்த்த பஞ்சகம் தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குதற்குத் தனது திருவுருந்தித் தாமரையி னின்றும் நான்கு முகங்களையுடைய பிரமனைப் படைத்த ஒளியினையுடையவனான எம்பெருமானுக்கல் வாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அருச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவ ஆகுமோ? ஆகா. (4) படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தக்க ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன், தன்னுடைதாகித் தனித்த காரணமான மூலப் பகுதியினுள்ளே மேலான தேவர்களையும் மற்றெப் பொருள்களையும் படைக்கத் தகுதியான அழகியதாமரை மலர் போன்ற திருக்கண் களையுடையவன், என்னை அடிமை கொண்டவன், பேரொளியுருவன் ஆன எம்பெருமானுக்கு மேம்பட்ட ஒர் இறைவன் உளன் என்று அறிகின்றவர்கள் யாவர்? ஒருவரும் இலர். (5) உயர்தினையும் அஃறிணையுமான எல்லாப் பொரு ளும் ஒன்றோடொன்று நெருக்குண்ணாதவாறு தன் வயிற் றில் ஒடுங்கும்படி நின்ற, பரந்து விரிந்த ஞான வெள்ளத் தினையுடைய ஒளிமிகுந்த திருமேனியையுடையவர்யாவர்? அவர்தாம் எமக்காகத் திருப்பாற்கடலில் அறிதுயிலில் ஆழ்ந்து கிடக்கின்றவர். (6) ஆலந்தளிராகிய படுக்கையில் சயனித்திருக்கின்ற, வள்ளல் தன்மையும் வலிமையும் பொருந்திய வயிற்றை யுடைய பெருமான்; ஒருவர்க்கும் தோன்றாத ஆச்சரிய மான, உள்ளே உள்ளே செல்லுகின்ற, அவனுடைய மனத்தின் எண்ணத்தை அறிய வல்லவர் எவர் தாம்? ஒருவரும் இலர். (7) தன் நினைவினாலேயே எல்லாத் தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியமான செயல்களையுடைய வனையல்லாமல், இம்மூன்று உலகங்: