பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அர்த்த பஞ்சகம்


யுடையவன்; மோட்சத்திற்குக் காரணமானவன்; பிறவியாகின்ற கடலை நீந்த வேண்டும் என்றிருப்பவர்கட்குத் தெப்பமாக இருப்பவன். (1)

பூக்களையுடைய குளிந்த தண்ணிர் நிறைந்த பெய்கையிலே கஜேந்திரன் அடைந்த துன்பத்தைப் போக்கிய, அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் தரித்த, எனது ஒப்பற்ற தலைவனுடைய சம்பந்தமானது நீந்தப்படுகின்ற துன்பத்தையுடைய பிறப்பு முதலாகவுள்ள மற்றெல்லாத துன்பங்களையும் போக்கும். துன்பமில்லாத வீட்டுலகிற்கும் காரணமாகும். (2)

தன்னை உண்டாக்கிய உந்தியோடு பொருந்தி உலகத்தையெல்லாம் படைக்கின்ற பிரமனுமாவான்; திருமேனியின் வலப் பாகத்தில் பொருந்தி உலகங்களையெல்லாம் அழிக்கின்ற சிவனுமாவான்; தனது திருமார்பில் சேர்க்கப் பெற்ற பெரிய பிராட்டியாரை உடையவனாய்த் தனக்குத் தகுதியான செயலையுடையவனாயிருக்கிற எம்பெருமானுடைய பெரிய காரியங்கள் எங்கும் காணக் கூடியனவாக இருக்கும். (3)

சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் ஐந்து புலன்களிலும் மேய்கின்ற ஐம்பொறிகட்கும் வசப்பட்டிருத் தலைத் தவிர்த்து ஆனந்தம் முடிவில்லாததாய் ஒப்பற்ற தாயுள்ள வீட்டுலகின்கண் செல்ல இருக்கின்றவர்களே! மனம் சுழன்று அழியும்படி அசுரர்களை அழித்தவனுடைய பலம் முற்பட்டிருக்கின்றவனுடைய நற்குணங்களில் இடைவிடாமல் மூழ்குங்கள். (4)

ஹயக்கிரீவனாகி ஆமையாகி மீனாகி இராமன் கிருட்டிணன் முதலிய மனித வடிவமும் ஆன தேவர்கட்கும் தேவர்களான நித்தியசூரிகட்குத் தலைவனாகிய என் தீர்த்தன், இடைவிடாத துன்பத்தையுடைய பிறப்பு முதலாக மற்றுமுள்ள எல்லாவற்றுக்கும் சோம்புதலில்லாத