பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஈசுவரனின் இயல்பு 37 تیمم-سیس-پیسے தனித்த காரணனாகி மூன்று உலகங்களையும் பாதுகாக் கின்றவன். (5) அருச்சுனன் தீர்த்தனுடைய உலகங்களை அளந்த செம்மை பொருந்திய திருவடிகளின்மேல் அழகிய மாலை யினை அணிந்து, அணிந்த அம்மாலையினையே சிவ னுடைய சடையின் மேலே தானே நேரில் கண்டு கண்ண பிரானே இறைவனாவான் என்று தெளிந்து அறுதியிட்ட பசிய திருத்துழாய் அணிந்த கண்ணபிரானுடைய பெருமை இப்பொழுது கண்டு மீண்டும் ஒருவரால் ஆராய வேண்டும்படி இருக்கின்றதோ? இல்லை. (6) அறப்பெரிய இறைவன் பூமிப் பிராட்டியை, கடற் கரையில் வழிவேண்டிக் கிடந்தான்; சித்திர கூடமலையில் முனிவர்களோடு இருந்தான்; இராவணனைக் கொன்ற பின்னர் வீர இலக்குமியோடு நின்றான்; மூன்றடிகளால் அளந்தான்; வராகமாகிக் கீழேபுக்கு இடந்து மேலே கொண்டு வந்தான், பிரளய காலத்தில் தன்னுள் மறைத் தான்; மீண்டும் உமிழ்ந்தான்; வலிய பெரிய தோள்கள் இன்பத்தால் பூரிக்கும்படித் தழுவினான். ஆதலால் பூமிப் பிராட்டி விஷயமாகச் செய்கின்ற அன்பு நிறைந்த காரியங் களைக் காண்பார் யாவர்? (7) எம் ஈசனாகிய கண்ணனை அறிய வல்லவர் யாவர்? காணும் விதந்தான் யாங்ங்னம்? அவனுடை உணவினைப் பேசின் எல்லா உலகங்களும் ஒரு கவளத்துக்கும் போத மாட்டா; தங்கியிருக்கும் வீடோ எல்லா உலகங்கட்கும் அப்பாற் பட்டது; அவனோ தன்னையொழிந்த மற்றை எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாக இருந்து கொண்டு எல்லாத் திக்குகளிலும் ஒன்றையும் விடாதவ னாகி எல்லா இடங்களிலும் பரந்திருக்கின்றான் ஆதலின். (8) கண்ணன் எல்லாவிடத்திலும் இருக்கின்றான் என்று கூறிய மகன் பிரகலாதனைத் தந்தையாகிய இரணியன்