பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அர்த்த பஞ்சகம்



"நீ கூறுகின்ற கண்ணன் இவ்விடத்தில் இல்லாதவனே யாவன்" என்று தூணை அடிக்க அத்தூணில் அப்பொழுதே அவ்விரணியன் மாயும் படியாகத் தோன்றிய, என் சிங்கப் பிரானுடைய பெருமை ஆராய்தற்குரிய தன்மையதோ? (9)

சிறப்பினைக் கொண்டுள்ள பரமபதம் சுவர்க்கம் நரகம் முடிவாக, அன்பினைக் கொண்டுள்ள தேவர்கள் நடுவாக, மற்றும் உண்டான எல்லாப் பொருள்கட்கும் வேராகி முதலாகி வித்தாகிப் பரந்து தனித்து நின்ற கார் காலத்து மேகத்தைப் போன்ற வண்ணத்தையுடையவ னான என் கண்ண பிரானை நான் கண்டேன். (10) (4) எம்பெருமான் எல்லாத் தேவதைகட்கும் மேம்பட்ட வன் இஃது ஒன்றும் தேவும்' (4.10)[1]. என்னும் திரு வாய்மொழியால் பெறப்படுகின்றது. தேவர்களும் தேவர்கள் தங்கியிருக்கின்ற உலகங்களும் மக்கள் முதலான உயிர்களும் மகத்து முதலான தத்துவங் களும் மற்றும் எல்லாப் பொருள்களும் ஒன்றும் இல்லாத அந்தக் சாலத்தில் நான்கு முகங்களையுடைய பிரமனோடு கூட தேவர்களையும் அவர்சள் தங்கியிருக்கின்ற உலகங் களையும் மற்றை உயிர்க் கூட்டங்களையும் படைத்தவன், திருக்குரு கூரில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக் கின்ற ஆதிப்பிரான் இருக்க மற்றைத் தெய்வங்களைத் தேடுகின்றீர்களே! (1) பலவகைப்பட்ட நாடுகளிலும் நகரங்களிலும் உள்ள வர்களே! நீங்கள் விரும்பி வணங்குகின்ற தெய்வங்களை யும் ஆதிகாலத்திலேயே படைத்தான், அழிதல் இல்லாத

12. இப் பதிகத்தில் திருமந்திரத்தின் பொருள் சொல்லப் படுவதாக ஈட்டாசிரியர் குறிப்பிடுவர்.


  1. இப் பதிகத்தில் திருமந்திரத்தின் பொருள் சொல்லப் படுவதாக ஈட்டாசிரியர் குறிப்பிடுவர்