பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஈசுவரனின் இயல்பு 39 கல்யாண குணங்களையும் புகழையும் உடைய ஆதிப் பிரான், எழுந்தருளியிருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தைப் பாடி ஆடித் துதித்துப் பரந்து செல்லுங்கள். (2) பரந்திருக்கின்ற தெய்வங்களையும் அவர்கட்கு உறை விடமான பலவகைப்பட்ட உலகங்களையும் படைத்தும், பிரளயம் வந்த காலத்தில் அவற்றை உடனே விழுங்கியும், பிரளயம் அறியாதவாறு மறைத்தும், பின்னர் வெளிநாடு காண உமிழ்ந்தும், திரிவிக்கிரமாவதாரத்தில் இரண்டு அடிகளால் அளந்தும், வராக அவதாரத்தில் பிரளயத்தி லிருந்து எடுத்தும் செய்துபோன காரியங்களைப் பார்த் திருந்தும் அவனே பரன், அவனுக்கே உரியது உலகம் என்பதைத் தெளிய கில்லீர்; தேவர்கள் தலைகளாலே வணங்குகின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குச் ச ரீ ர மாயல்லது சுதந்திரத்தோடுகூடியிருக்கின்ற வேறு தெய்வம் இல்லை; இருக்குமேயாயின், பலவகைப்பட்ட உலகத் திலுள்ளவர்களே! என்னோடு வந்து பேசுங்கள். (3) பேசப்படுகின்ற சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் மற்றைத் தேவர்கட்கும் தலைவன் அவனே யாவான்; இதனைக் கபாலம் விடுபட்ட சரிதையாலே கண்டு கொள் ளுங்கள்; திருக்குருகூரில் எழுந்தளியிருக்கின்ற எம்பெரு மான் விஷயத்தில் பயனில்லாத வார்த்தைகளை ஏற்றிப் பேசுதல் அநுமானத்தைப் பிரமாணமாக உடையவர்கட்கு என்ன பயனைத் தருவதாம்? (4) இலிங்கபுராணத்தைப் பிர மாண மா கவுடைய நீங்களும் சமணர்களும் பெளத்தர்களும் மேலும் மேலிட்டு வாதுகின்றவர்களானவைசேடிகர்களான நீ ங் க ளு ம், நீங்கள் வணக்குகின்ற தெய்வங்களும் ஆகி நிற்கின்றவன், திருக்குருகூரில் எல்லாக் குணங்களோடும் பொலிந்து