பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஈசுவரனின் இயல்பு 4l எல்லாத் தேவர்களும் எல்லா உலகங்களும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களும் ஆகிய இத்தனையும் குற்றம் இல்லாத மூர்த்தியைக் போன்று இருந்தபடியே தன் பக்கலில் நிற்க, திருக்குருக்கூரில் எழுந்தருளியிருக்கும் மாணி வேடத்தையுடைய வாமனனாகிய நிள்குடக் கூத்தனுக்கு அடிமை செய்வதே சீரியதாகும். (10) திருப்பாவை திருப்பாவையில் அர்த்தபஞ்சக தத்துவங்கள் அமைந்து கிடக்கின்றன என்பதையும் நம் முன்னோர் சிந்தித் துள்ளனர். அந்தச் சிந்தனைகளை ஈண்டுக் காட்டுவேன், இறைவனின் இயல்பு; திரிமூர்த்தி சொரூபமாகிய நாராயணனை நோக்கியே இந்த நோன்பு நோற்கத் தக்கது என்பது ஆண்டாளுடைய உள்ளக்கிடக்கை. ஆதலால் 'மார்கழித் திங்கள்’ (1) என்ற முதற் பாசுத்ேதில். "நாகா யணனே நமக்கே பறைதருவான்' என்ற அடியில் பரத்திலுள்ள நாராயணனைப் பாடுகின் றாள் நாராயணன் அடியார்க்குக் காரியம் செய்யுமிடத்துச் சாதனங்களை எதிர்பாராது செய்து தலைக்கட்டுபவன் என்பதை உணர்த்தும் ஆசாரியணை நாராயணாவதார மாகச் சொல்வது மரபு. இவ்விடத்தில் நாம்மாழ்வாரை நோக்கி ஒரு பரமபக்தர் பாடியுள்ள, சேமம் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ காமம் பராங்குசமோ காரணமோ - தாமம் துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கும் உளவோ பெருமான் உனக்கு? என்ன பாசுரத்தை நினைத்தல் தகும். 'பறைதருவான்' என்பதால் எதிர்பார்க்கும் பொருளை நல்குவான் என்ற பொருளைத் தரும்.