பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 - அர்த்த பஞ்சகம் நாராயணனே, நமக்கே என்ற பிரிநிலை ஏகாரங் களினால் 'சதாசாரியனே தந்தருள வல்லவன், சச்சீடனே பெறத்தக்கவன் எ ன் பது பெறப்படும். இரும்பைப் பொன்னாக்குமாப்போலே, பரம நீசனாயிருந்தவனை உத்தமாதிகாரியாக ஆக்கிவிடுவது ஆசாரியரின் கார்யம். பஞ்சசம்ஸ்காரம் பண்ணித் தீமனம் கெடுத்து ஆட் கொள்ளுபவன் ஆசாரியன். இன்னும் நமக்கே என்ற பதில் உள்ள ஏகாரமும் அப்பொருள் உடையதாய், நாராயணன் சர்வசாதாரண சுவாமியாயினும் ஆகிஞ்சக்யம், அகங்ய கதித்துவம் என்னும் அதிகாரங்கள் அமைந்த நமக்ன்றி மற்றையோர்க்குக் காரியம் செய்யான் என்பதைத் தெரிவிக்கும். வையத்து' (2) என்ற இரண்டாம் பாசுரத்தில் பார்க்கடலுள் பையத் துயின்ற பரமன் அடியாடி என்ற அடிகளில் வியூக ரூபமாகப் பரன் பாற்கடலில் பையத்துயிலும் மூர்த்தியைக் காட்டுகின்றாள். ஆயச் சிறுமிகள் எல்லாவகையாலும் விஞ்சின கண்ணபிரானைப் பாடாது திருப்பாற்கடல் நாதனைப்பாடுவதாகச் சொல்லு கிற கருத்து யாதெனில்: "கிருட்டிணனையும் தம்மையும் நோக்கிப் பண்டே அதிக ஐயம் கொண்டிருக்கின்ற இடையர் நமக்குத் தெய்வம் தந்த இச்சேர்த்தியைச் சீறி அழிக்கில் தாம் செய்வதென்?' என்னும் அச்சத்தினால் கண்ணனடி பாடுவதாகக் கூறுகின்றிலர் எனக் கொள்ளல் வேண்டும். உள்ளுறையில், பாற்கடலுள் பையத்துயின்ற பரம னடிபாடுகையாவது என்னெனில்: "உனது, பாலேபோல் சீரிற் பழுத் தொழிந்தேன்' (பெரி. திருவந் 58) - உன்னு டைய பால் போலப் பரமபோக்கியமான திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்’ என்கின்றபடியே பால்