பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஆன்மாவின் இயல்பு ஞானத்தின் இடமான ஆன்மா சித்து’ என்றும் வழங். கப் பெறுகின்றது. இஃது அன்னமயம், பிராணமயம், மனோமயம் என்பவற்றிற்கு அப்பாலாயிருப்பது. தேகம், இந்திரியங்கள், மனம், பிராணன், ஞானம் என்ற இவற் றிற்கு வேறுபட்டது. அறிகின்ற தலைவனும், அறிவும், அறியப்பெறும் பொருளும் தானாகவே இருப்பது. அணு வின் அளவினையுடைய இந்த ஆன்மா ஆனந்த வடிவத் தைக் கொண்டது. என்றும் நிலைபெற்றிருப்பது. இது கண் முதலிய இந்திரியங்கட்குத் தோற்றாது. மனத் தாலும் இதனை நினைக்க முடியாது. இதனைப் பகுதி களாகவும் பிரிக்க முடியாது. அவயவமும் அற்றது. வளர்தல், பருத்தல், குறைதல் முதலிய வேறுபாடுகள் இதற்கு இல்லை. அறிவுமயமாக இருக்கும் இந்த ஆன்மா அறிவுக்கும் இருப்பிடமானது. இந்த அறிவு தர்ம பூத ஞானம்' என வழங்கப்பெறும். இதனால் ஆன்மா தர்மி பூத ஞானம்' என வேறொரு பெயராலும் வழங்கப் பெறும். இந்தச் சீவான்மா தனக்கு எப்பொழுதும் தோன் றிக் கொண்டே இருக்கும். தன்னைத் தான்’ என்று அறியும்பொழுது தர்மபூத ஞானம் உதவ வேண்டும் என்பதில்லை. ஆனால், சீவான்மா தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தன் தர்மபூத ஞானத்தால் மட்டிலுமே அறிய முடியும். தன் சொரூபத்தைத் தர்மபூத ஞானத்தைக் கொண்டும் அறியலாம். ஆன்மா இறைவன் ஏவியபடி நடப்பது; அவனால் தரிக்கப் பெற்று அவனுக்கு அடிமையாகவே இருப்பது, இதனை நன்கு உணர்ந்த ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் இத்தன்மையை வெளியிட்டுள்ளனர். பூதத்தாழ்வார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/74&oldid=739082" இலிருந்து மீள்விக்கப்பட்டது