பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அர்த்த பஞ்சகம் வேறாகக் காணப்பெறுதல் இல்லை. இந்த முறையில் ஒவ்வோர் ஆன்மாவும் ஈசுவரனின் உடலாக இருக்கும். இது சரீர-சரீரி பாவனை (உடல்-உயிர் உறவு) என்று வழங்கப்பெறும். திவ்வியக்கவியின் கருத்து : மேற்கூறிய கருத்துகளை ஒருவாறு தொகுத்து திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், மாத வங்கனென் றோத வங்களின் மருவு சீவனென் றொருவ! நீபெரும் பூத மல்லை;யிங் திரிய மல்லை;ஐம் புலனு மல்லை;கற் புத்தி யல்லைகாண்; சீத ரன்பரங் தாமன் வாமனன் திருவ ரங்கனுக் கடிமை; நீயுனக் கேது மில்லை யென்றறி யறிந்தபின் ஈதின் மாவதம் இல்லை எங்குமே." (மா.பெரிய, ஒது - சொல்லப்பெறும்; அவங்கள் - வீண் தொழில்கள்: மருவு - பொருந்துகின்ற; ஒருவ ஒருவனே, புத்தி - அறிவு; புலன்-தந் மாத்திரை அடிமைஇடியவன்; ஈதின் - இது போன்று) 'தவம் என்னும் கலம்பக உறுப்பை விளக்கக் கூறும் பாசுரம் இது. தம் மனத்திற்குத் தானே உபதேசிக்கும் முகத்தால் சீவான்மாவின் சொரூபம் இத்தன்மையது என விளக்குகின்றார் அய்யங்கார். "பெரிய தவம் என நினைத்து வீண்தொழில்களில் பொருந்தியிருக்கும் ஒருவனே. (ஆன்மாவை விளித்தபடி) நீ ஐம்பெரும் பூதங் களும் அல்லை; ஐந்து இந்திரியங்களும் அல்லை; ನಿಖ அறிவும் அல்லை; திருமகளைத் தன் மார்பில் தரித்தவனும் "தத்தையுடையவனும், வாமன உருவமாக வந்து மாவலியின் செருக்கை அடக்கியவனுமாகிய அரங்க நகர் 1. திருவரங். கலம்,-63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/77&oldid=739085" இலிருந்து மீள்விக்கப்பட்டது