பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மாவின் இயல்பு 49 அப்பனுக்கு அடியவன் நீ; உனக்கு யாதொரு சுதந்திரமும் இல்லை: இதனை நீ அறிவாயாக இங்ங்ணம் அறிந்தால் இதுபோன்ற பெரிய தவம் எந்த உலகிலும் இல்லை’ என்கின்றார் அய்யங்கார். தேசிகனின் கருத்து: சுவாமி தேசிகனும் ஆன்மாவின் இயல்பை இவ்வாறு விளக்குவர்: இந்திரியங்கள் - மனம் - பிராணவாயுக்கள்-ஞானம் ஆகிய இவற்றைக் காட்டிலும் சீவான்மா வேறுபட்டவன்; நான்’ என்று தோன்றிக் கொண்டே இருப்பவன்; தனக்குத் தானே தோற்றுபவன்; அணுவாய், ஞான-ஆனந்த சொரூபனாய் நிற்பவன்; ஞானத்தை குணமாகவும் கொண்டவன்; உடல்தோறும் வேறுபட்டு நிற்பவன்; எம்பெருமானுக்கு அடிமையாக நிற்பதையே சொரூபமாகக் கொண்டவன். இத்தகைய சீவான்மாவுக்கு அந்தர்யாமியாய் நிற்பவன் பேரருளாளன் -இறைவன்' (தே.பி. 250.) மேலும் இந்த சுவாமி, சீவன் தன் கர்ம பலனை அநுபவித்தால் எம்பெருமானுக்கு லீலாரசம்’ ஆகிறது என்கின்றார். “பேரருளாளன் தன் சங்கற்பத்தால் சீவான் மாவுக்கு அருளியகுணங்கள், இந்திரியங்கள் ஆகியவற்றைச் சீவான்மா தன் வினைக்குத் தக்கவாறு பயன்படும்படிச் செய்கிறான். சீவான்மா உடலைப் பெற்றுக் கர்மத்தின் பலனை அநுபவிப்பதும் அவற்றை வெறுத்துத் தள்ளுவதும் பின்னர் அவற்றை விரும்புவதுமாய் இவ்வாறு சம்சாரப் பெருங்கடலில் உழல்கின்றான். இத்தகைய சீவான்மாவுக்கு பேரருளாளன் அந்தர்யாமியாயிருந்து கர்மபலனை அநுப விக்கச் செய்து பிராட்டியுடன் கண்டு லீலாரசத்தை அநுபவிக்கின்றான்' (தே. பி. 251) ஆன்மாவின் வகைகள் : சீவான்மாக்கள் எண்ணற் றவை. இவர்களின் தொகுதி நித்தியர், முத்தர், பத்தர், அ.-4