பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 அர்த்த பஞ்சகம் கேவலர், முமுட்சுகள் என்னும் வேற்றுமையால் ஐந்து வகைப்பட்டிருக்கும், நித்தியர் என்போர், ஒருநாளும், சம்சார சம்பந்த உணர்வு இல்லாதவர்கள். இவர்கள் வைகுந்தவாசிகள். அனந்தன், கருடன் (பெரிய திருவடி), சேனை முதலியார் (விஷ்வக் சேனர்) தொடக்கமானவர்கள் ஆவர். முத்தர் என்போர், இவ்வுலகத் தளைகள் களையப் பெற்றுப் பரமபதத்தில் பகவத அநுபவம், கைங்கரிய போகம் என்ற பேறுகளை உடையோர். வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடாக்கி நின்கின்றேன்; நின்று நினைக்கின்றேன் - கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன் . காண் - (நான். திருவந், 40) (வெற்பு-மலை; வீடு-மோட்சம்; நூல்-மறை கள்; நூலாட்டி-நூலாளனின் பெண்பால், பெரிய பிராட்டியார் கேள்வன்-கணவன், கால்-திருவடி கள்) என்று பக்திசாரர் தாம் பெற்ற முக்தி நிலையைக் குறிப் பிடுவர்; பக்தி, பிரபத்தி இவற்றுள் ஒன்றை அநுட்டித்து மோட்சத்தைப் பெற்றவர்கள் இவர்கள; அதாவது முக்தர்கள். 象 பத்தர் என்போர், மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய பகவானின் மாயையால் மறைக்கப் பெ ற்ற சொரூபத்தை உடையவர்கள். அநாதி அஞ்ஞானத்தால்