பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


怒念 அர்த்த பஞ்சகம் தொல்வினை என்றுமில் லாச்சோதி வானவரும் சுருதி செய்வினை யோர்ந்தவர் சீவரென் றோதச் சிறந்தனமே. (தே-பி-26) (வினை - கருமம்; பந்தம்.உற்று - பிணிக்கப் பெற்று; உழல்கின்றனர்-துன்பப்படுபவர்களாகிய பத்தர்கள்; நல்வினை-நல்ல உபாயம்; மூட்டியஅநுட்டிக்கச் செய்த பதம்- திருவடிகள்; பதம் பெற்றவர்கள்-முத்தர்கள்; தொல்வினை-அநாதி யான கர்மம்:சோதி வானவர்-நித்தியர்கள்; சுருதி - மறை; செல்வினை - செல்லுகின்ற வழியை, ஒர்ந்தவர் - ஆராய்ந்த ஆ சிரி ய ர் க ள், ஒதஉபதேசிக்க) # என்று எடுத்துக் காட்டுவர். 'கர்மங்களால் கட்டுப்பட்ட வர்கள் பத்தர். எம்பெருமான் சந்நிதியை (பரமபதத்தை) அடைந்தவர்கள் முத்தர். அநாதியான கர்ம சம்பந்தம் இல்லாதவர்கள் நித்திய சூரிகள்' என்கின்றார் சுவாமி தேசிகன். திருவாய்மொழி திருவாய்மொழியில் ஆன்மாவின் இயல்பு பயிலும் சுட ரொளி (3,7) ஏறாளும் இறையோனும் (4.8), கண்கள் சிவந்து (8.8), கருமாணிக்கம் (8.9) என்ற நான்கு திருவாய்மொழிகளிலும் காணலாம் என்பதை முன்னர்ச் சுட்டினோம். அதனை ஈண்டு விளக்குவோம். (1) அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியார் எனல்: இது திருவாய்மொழி பயிலும் சுடரொளி என்ற பதிகத்தில் (3.7) தெளிவாகின்றது.