பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அர்த்த பஞ்சகம் ஆளுகின்ற ஒப்பற்ற திருமேனியையுடையவனும், கூட்டம் கூட்டமாக அசுரர்கள் சாம்பலாகும்படியாக நினைத்துப் படையைப் பிரயோகித்த மாறாளனுமான சர்வேசுவர னால் விரும்பப்படாத அழகிய இந்நிறத்தால் ஒருவித பயனும் உடையோம் அல்லோம். (1) மணிபோன்ற ஒளியையுடைய அழகிலே யாதொரு குறையும் இல்லாத பெரியபிராட்டியார் நித்திய வாசம் செய்யும் மார்பையுடையவனும், அழகிய பெருமை. பொருந்திய விசாலமான மலை போன்ற தோள்களையும் பகைவர்களைக் கொல்லுகின்ற திருவாழியைத் தரித்த திருக்கரத்தையுமுடையவனும், கைங்கரியத்தின் அளவிலே தவறாமல் அடியேனை அடிமை கொண்ட நீலமணி போன்ற நிறத்தையுடைய மாயவனுமான சர்வேசுவர னால் விரும்பப் படாத மட நெஞ்சால் ஒரு காரியத்தை யுடையொம் அல்லோம். (2). மடப்பம் பொருந்திய நெஞ்சால் குறைவில்லாத தாய் மகளாகத் தன்னைச் செய்து கொண்டு வந்த ஒரு பேயாகிய பூதனையினது மிக்க நஞ்சுடைய முலையைச் சுவைத்துப் பால் பருகிய மிகுந்த ஞானத்தையுடைய பாம்பின் படுக் கையிலே சயனித்திருக்கின்ற பெருத்த மலைபோன்ற தோள்களையுடைய பரம புருடனும், நெடுமாயனுமான எம்பெருமான் விகும்பாத நிறை என்னும் குணந்தால் யாதொரு பயனையும் உடையோம் அல்ைோம். (3} நிறை என்னும் குணத்தாலே குறைவற்றிருக்கின்ற, நீண்ட மூங்கில் போன்ற தோள்களை யுடைய மடப்பம் பொருந்திய நப்பின்னைப் பிராட்டியினது தனங்களைச் சேரும்பொருட்டுப் பொறையினாலே, போர் செய்கின்ற இடபங்கள் ஏழனையும் கொன்று மகிழ்ந்த, கறை தோய்ந்த துவர் ஊட்டின உடுக்கையினையும், கடையாவினையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/85&oldid=739094" இலிருந்து மீள்விக்கப்பட்டது