பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மாவின் இயல்பு 57 (மூங்கில் குழாய், கழிகோலினையு (வீசுகோல்) முடைய கையினையுமூடைய சறையினார் விரும்பாத தளிர் ($# ‘ன்ற நறத்தால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம். - (4), தளிர் போன்ற நிறத்தாலே குறைபாடில்லாக, தனிச் சிறையிலே பிரசித்தமாயிருந்த கிளிபோன்ற சொற்களை யுடைய பிராட்டி காரணமாக, கிளர்ச்சியையுடைய இராவணனது நகரமாகிய இலங்கையை எரித்த, தேன் பொருந்திய மலர்களையுடைய திருத்துழாய் மாலை யானது வாசனை வீசுகின்ற திருமுடியை யுடையவனும், கடலாற் சூழப்பெற்ற இவ்வுலகமக்களிடத்தே திருவருள் மிகுந்தவனுமான சர்வேசுவரன் விரும்பாத அறிவினால் ஒரு பயனையும் உடையோம் அல்ாலாம். {5} அறிவு ஒன்றில் மாத்திரம் குறைபாடு இருப்பதை அறியாத அகன்ற உலகிலே உள்ள மக்கள் அறியும்படியாக உபாயங்கள் எல்லாவற்றையும் எடுந்துக் கூறிய நிறை ஞானத்து ஒரு மூர்த்தியும், சிறிய பிரமசரிய வடிவு கொண்டு கொடிய செயலாலே உலகத்தை அளந்து கொண்ட விரகையுடைய தலைவனுமான சர்வேசுவரன் விரும்பாத மிக்க ஒளியால் யாதொரு பயனையும் உடை யோம் அல்லோம். (6) கிளர்ந்த ஒளியாலே குறைபாடில்லாத நரசிங்க உருவமாய்க் கிளர்ந்து எழுந்து. கிளர்ந்த ஒளியை யுடைய இரணியனுடைய அகன்ற மார்பினைக் கிழித்து மகிழ்ந்த, வளர்கின்ற ஒளியையுடைய பிரகாசம் பொருந்திய சக்கரத்தையும் பாஞ்சசன்யம் என்னும் சங்கினையும் நீல மணி போன்று வளர்கின்ற ஒளியினையுமுடைய சர்வேசு வரன் விரும்பாத அழகுடைய வளையல்களால் ஒரு பயனையும் உடையோம் அல்லோம். (7