பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அர்த்த பஞ்சகம் வரிகளையுடைய பாஞ்சசன்யம் என்னும் சங்கினது குறைபாடு இல்லாத பெரிய ஒலியால், எரிகின்ற அச்ச மாகிய நெருப்பானது பகைவர்களின மனங்களிலே புகும் படியாக ஊதிப் பெரிய நிலத்தினது துன்பத்தை நீக்கிய, அறிதற்கு அரிய சிவனும் பிரமனும் இந்திரனும் வணங்கி ஏத்துகின்ற விரிந்த கல்யாண குணங்களை யுடைய சர்வே சுவரன் விரும்பாத மேகலையால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம். (8) மேகலையாலே குறைவில்லாத மெலிந்திருக்கின்ற அகன்ற அல்குலையுடைய இன்பத்திற்குத் தக்கவளான உஷையினது புகழையுடைய தந்தையாகிய, வெறி பொருந் தியபாணாசுரனுடைய தோள்களைத் துணித்து, திருவனந் தாழ்வான் ச ய ன த் தி ன் ேம லே துரங்குகின்றவனைப் போன்று, உலகமெலலாம் நன்மையிலே பொருந்தும்படி யோக நித்திரை செய்கின்ற சர்வேசுவரன் விரும்பாத இத்தச் சரீரத்தால் யாதொரு பயனையும் உடையோம் அல்ல்ோம். (9) உடல் வலிமையில் குறைவில்லாத அசுரர் கூட்டங்கள் உயிர் நீங்கிய மலைத்துண்டுகள் கிடந்தனபோலத்துண்டங் கள் பலவாகத் துணித்து மகிழ்ந்த, மிகப் பெரியகங்கை யைத் தரித்த சடையாகிய முடியையுடைய கிவயெருமான் ஒரு பக்கத்திலே ஒப்பில்லாதபடி விரும்பி வசிக்கின்ற திரு மேனியையுடைய எம்பெருமான் விரும்பாத என்னுடைய இந்த உயிரால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம் (10) (3) ஆருயிரின் ஏற்றத்தை எம்பெரும்ான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்:இது கண்கள் சிவந்து (8.8) என்ற திரு வாய் மொழித் திருப்பதிகத்தால் விளக்கப் பெறுகின்றது. திருக்கண்கள். செந்நிறத்தையடைந்து பெருத்திருப் பனவாக, திருப்பவளமும் சிவந்து கனிந்திருக்க, உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/87&oldid=739096" இலிருந்து மீள்விக்கப்பட்டது