பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மாவின் இயல்பு 59 வெள்ளியபற்களையுடைய விளங்குகின்ற பிரகாசத்தையும், விளங்கி அசைகின்ற கரகுண்டலத்தை உடையவனும், மேகம் போன்ற திருநிறத்தையுடையவனும், ஒளி வீசுகின்ற திருமுடியையுடையவனும், நான்கு தோள்களை யுடையவனும், வளைந்தவில்லையுடையவனும், பிரகாசம் பொருந்திய சங்கு கதை வாள் சக்கரம் என்ற இவற்றை யுடையவனுமான தப்பற்ற எம் பெருமான் அடியேன் மனதில் எழுந்தருளியுள்ளான். (l) அண்டத்திற்கு உள்ளே இருக்கும் எல்லாப் பொருள் கட்கும் அந்தர்யாமியாக இருப்பவனும், அண்டத்திற்குப் புறத்தில் இருக்கும் எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமி யாக இருப்பவனும், இதுதான் எல்லா வகையாலும் ஒத்த பொருன் என்று எடுத்துக் கூறத்தக்க உவமையை உடைய வன் அல்லா தவனும்,மேலானவர் களுக்கும் மேலானவனும், புதுமை சேர்ந்த வாசனையிலும் தேனிலும் உள்ள இன்பத் தினுடைய குற்றம் நீங்கின சாரமான பாகம்போல் இருக் கின்ற அழியாத ஆனந்தத்தின் பெருமையுடையவனும், ஞானத்தில் மேம்பட்டிருக்கின்ற ஒருவனுமான எம்பெரு மான் என் ஆன்மாவிலும் உள்ளான்; என் உடலிலும் உள்ளான்.” (2) ஞானத்திலே மேம்பட்டவர்களான நித்தியசூரி களுடைய காரியங்களுக்கு எல்லாம் நிர்வாககனான ஒப்பற்றவனை, அவனது திருவருளால் கிட்டுதற் பொருட்டு என்னுடைய விருப்பமாகிற ஞானத்துக்குள்ளே அவனை இருக்கச் செய்தேன்; அவ்வாறு விரும்பியதும் 2 இதன் விளக்கம் இந்த ஆசிரியரின் முத்திநெறி (ப ா ரி நி ைலய ம் 184, பிரகாசம் சாலை, சென்னை-108) கடிதம் 4. பக்கம் (29-36) கண்டு தெளியலாம்.