பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


63 . அர்த்த பஞ்சகம் பொருத்தமில்லாத பொருள்கள் இர ண் டு ஒன்றாகக் கூடுமேயானால் சீவான்ம சொரூபமும் ஆடுபுட்கொடி ஆதிமூர்த்தியின் சொரூபமாக ஆகக் கூடும்? அது இன்று; ஆதலால் அந்த சீவான்ம சொரூபம் சீவான்ம சொரூப மாகவே இருக்கும், (பரமான்ம சொரூபம் ஆகாது). தம் மனம் சென்றது ஒரு வகையாலே மோட்சம் என்பது ஒன்றனைக் கற்பித்துக் கொண்டு சம்சாரத்தில் உழன்று திரியும் யோகிகளும் முக்காலத்திலும் உளராய் உள்ளனர்; இல்லாமல் இலர். (9) அடியார்களுக்கு இலர்' என்னாதபடி உளராய் இருப்பு வரும், அடியார் அல்லாதார்க்கு இலர்' என்று சொல்லலாம்படியே உளராய் இருப்பவருமான எம். ஒருவர் உளர்; அல் இறைவர் வந்து என் மனத்திலே நித்திய வாசம் செய்கின்றார்; ஆதலால் வளர்பிறைக்கு இருப்பது போன்ற வளர்ச்சியும் தேய்பிறைக்கு இருப்பது போன்ற குறைவும் உடையதாகிச் சூரியனும் இருளும் போன்று மாறி மாறி வரக் கூடியதான ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் அழித்தோம். (10) (4) தலைவியின் உண்மைக் காதலைத் தோழி தாய். மாருக்கு எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல்: இது திருவாய்மொழியின் கருமாணிக்க மலை (8.9) என்பதால் விளக்கப்பெறுகின்றது. (8.8)திருவாய்மொழியில் எம்பெரு மானைத்தவிர வேறு ஒருவருக்கும் உரிய எல்லாம் ஆன்ம சொரூபம் விளக்கப்பெற்றது, அந்த அடிமை இன்பத்தாலே மேலும் அன்பு சுரந்து அதன் பரவசத்தாலே தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டியின் நிலையை அடைந்து (ஆழ்வார்) தம்முடைய நிலையை அந்யாப தேசத்தாலே? பேசி இனியர் ஆகின்றார் (தோழி கூற்றாக). 3. அந்யாபதேசம்-மாற்றிச் சொல்லுதல்-வேறு: வகையில் பேசுதல்.