பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மாவின் இயல்பு 63 மேல் திருவாய்மொழியில் அவனுக்கே அடிமையாக இருத்தல் என்னும் தன்மை சொல்லிற்று; இத்திருவாய் மொழியில் பிறர்க்கு உரியனாய் இருத்தலும், தனக்குத் தானே உரியனாய் இருத்தலும் ஆகிய இரண்டு பேறும் அன்று என்கிறது. கரியதாகிய ஒரு மாணிக்க மலைமேலே தெளிந்த தடாகத்தில் பரப்பு மாறத் தாமரைகள் மலர்ந்தாற் போலே, திருமார்பும் திருவாயும் திருக்கண்களும் திருக் கைகளும் திருஉந்தியும் திருவடிகளும் தரித்திருக்கின்ற சிவந்த திருப்பீதாம்பரமும் உடைய உபகாரகனும் திருமாலும், எம்மானும், செழுநீர் வயல் சூழ்ந்த குட்ட நாட்டிலேயுள்ள திருப்புலியூரில் எழுந்தருளியிருக்கின்ற அருமாயனும் ஆன எம்பெருமானது திருப்பெயரை அல்லா மல் வேறு ஒரு வார்த்தையும் பேசுகின்றாள் இலள்: அன்னைமீர் இதற்கு என் செய்கேன்? (1) : தாய்மார்களே! அழகிய மாமேரு மலையின் மேலே சஞ்சரிக்கின்ற, நெருங்கிச் சூழ்ந்த ஒளியையுடைய சூரியனையும் அப்படியே ஒளியையுடைய பலவகைப் பட்ட விண்மீன்களையும் போலே, மின்னுகின்ற நீண்ட திருமுடி யையும் ஆரங்களையும் பல வகைப்பட்ட ஆபரணங்களை யும் தரித்திருக்கின்ற எம்பெருமான் எழுந்தருளியிருக் கின்ற, புன்னை மரங்கள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புலியூர் என்னும் திவ்விய தேசத்தை இவள் புகழ்கின்றாள்; இதற்கு நான் என் செய்வேன்? (2). அலைகள் மோதுகின்ற தண்ணிரையுடைய ஒரு கடல், நெருப்புக் கொளுத்தி எங்கும் விளங்குகின்ற தீக்கொழுந்: தோடு செல்வதைப் போன்று, செழுமையான கிரணங். களையுடைய சக்கரம் முதலான புகழப்படுகின்ற போர். செய்கின்ற ஆயுதங்களை ஏந்திக்கொண்டு போரிலே புக்கு, அசுரர்களை அழித்தவனான எம் பெருமான் எழுந்தருளி,