பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மாவின் இயல்பு 65 மெல்லிய இலைகளையும் அழகிய வளப்பத்தையும் உடைய வெற்றிலைக் கொடி தழுவ, அதனாலே பருத்த இளமை பொருந்திய அடியையுடைய பாக்கு மரங்களின் அருகிலுள்ள பெரிய இலையையும் மடலையுமுடைய வாழை மரங்களினுடைய இனிய கனிகள் சூழ, அதனால் வாசனை வீசிக்கொண்டு, இலைகளையுடைய புல்லாகிய தென்னை மரங்களின் நடுவில் தென்றற் காற்று வீசுகின்ற குளிர்ந்த திருப்புலியூரில் எழுந்தருளியிருக்கின்ற மிக்க செல்வ வளப்பத்தையுடைய கண்ணபிரானது திருவடி களைப் பெண்ணானவள் அடைந்தாள். (7) இவளுக்கு இருக்கும் மடப்பத்தைத் தாய்மாராகிய உங்கட்கு எவ்வகையில் சொல்லுவேன்? மிகுந்த செல்வத் தையுடைய பார்ப்பனர்கள் யாகங்களிலே ஒமம் செய்கின்ற நெய்யால் எரிகின்ற நெருப்பினின்றும் புறப்படுகின்ற மிக்க புகையானது சென்று, திடமான ஆகாயத்திலே உள்ள தேவலோகத்தை மறைக்கின்ற குளிர்ந்த திருப்புலி யூரில் எழுந்தருளியிருக்கின்ற படத்தையுடைப் பாம் பினைப் படுக்கையாகவுடைய எம்பெருமானது திருப் பெயரை அல்லாமல் வேறு ஒன்றையும் இவள் கூறாள். (8) குளிர்ந்த நீர்போல் இருக்கின்ற நிறத்தையுடைய கண் ணபிரான் எழுந்தருளியிருக்கின்ற, எங்கும் பரந்து கலந்து மிக்கிருந்துள்ள சாமவேதத்தை ஒதுகின்ற பார்ப்பனர் களின் ஒலியானது கடல் ஓசைபோன்று நிலை பெற்று ஒலிக்க, முதலைகள் தங்கியிருக்கின்ற குளங்கள்தோறும் பெருமை பொருந்திய தாமரைகள் நிலை விளக்கு எரியுமாறு போன்று மலர்கின்ற, கட்டளைப்பட்டிருக்கின்ற வயல்கள் சூழ்ந்த திருப்புலியூர் என்னும் திவ்விய தேசத்தினது புகழை அல்லாமல் வேறு ஒன்றையும் எக்காலத்திலும் இவள் நின்று பேச மாட்டாள். (9) 5 سه إ9ی