பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மாவின் இயல்பு 67 ஆழ்மோழையில் (பெரியாழ்.திரு.) என்று பெரியாழ்வார். அருளிச்செய்தபடி பெரு வெள்ளமான இவ்விஷயத்தில் பெருவெள்ளம் அ வ சி ய ம் என்றும் கருதினார்கள் ஆயச் சிறுமிகள். நம்மாழ்வார் திருவாய் மொழியிலும் அடியார்குழாய் களை உடன் கூடுவதென்றுகொலோ (திருவாய் ) என்று பகவதர் கூட்டத்தில் சேரப் பெறுவதையே புருஷார்த்தமாகக் கூறி முடிவிலும் 'வந்தவர் எதிர் கொள்ள மாமணி மண்டபத்து, அந்தமிழ் பேரின் பத்து அடியரோடிருந்தமை (திருவாய்.10.9:1:1) என்று பேற்றி னையே தாம் பெற்றதாகக் கூறியிருப்பதனால் பகவதநுப வத்தைக்காட்டிலும் பாகவதர் கூட்டத்தில் சேருவதே பரம புருஷார்த்தம் என்று தேறுதலால் இங்ங்னம் பத்துப் பாசு ரங்கள் அமைந்தது மிகப் பொருத்தம். கிருஷ்ணாதுபவத்தில் அ ைன வர் க்கும் அவா ஒத்திருக்கும்போது சிலர் எழுப்பச் சிலர் உறங்குவது அவாவிற்குக் குறைபோல் தோன்றுகிறதே எனின்: கண்ண பிரானது சேஷ்டிதங்களும் திருக்குணங்களும் இராமசரங் சள்போல், நஞ்சுண்டாரைப்போல் சிலரை மயங்கப் பண்ணும்; சிலரை இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமல் துடிக்கப் பண்ணும்; ஆ ைக யா ல் அவாவிற்குக்குறை இல்லை. உள்ளே கிடப்பவர்கள் மயங்கினவர்கள்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; வெளியே எழுப்புபவர்கள் துடிப்பவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தர்கள். ஆகவே அனைவரும் பகவதநுபவத்தில் ஈடுபட்டவர்களே என்று கூறுவதில் தட்டில்லை.(6) "சர்வசேவியான எம்பெருமான் சேஷயூதர் இருக்கு மிடத்திற்கு வந்து அருள் புரியக் கடமையுடையவன்.' அவன் அங்ங்ணம் செய்யாதொழியில் நாம் நம் சொரூபத் தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவன் இருக்குமிடத்