பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 அர்த்த பஞ்சகம் திற்குச் சென்று சேவித்தால், அவன் ஆ! நம் காரியத்தை நாம் செய்யத்தவறினோமே!’ என்று தான் கழிவிரக்க முற்று நம் காரியத்தைச் செய்து தலைக்கட்டுவன; எல்லோ ருமாகத் திரண்டு போகலாம், வா' என்று அழைக் கின்றனர். (8) இங்ங்னம் பத்துப்பாகரங்களால் பத்துப் பெண்களை உணர்த்தியபடியைக் கூறியது-திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலட்சம் குடிப் பெண்களையும் உணர்த்தியதற்கு உப லட்ணமாகும். இவற்றால் ஆயமகளின் (ஆன்மாவின்) இயல்புகளைச் சொல்லப்பட்டதை நினைத்து மகிழலாம்.