பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 அர்த்த பஞ்சகம் அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்து தீதின்றி வந்த பொருள் (754) என்ற வள்ளுவத்தின் ஒளியைக் கண்டு பயன்பெறுதல் வேண்டும். இவ்வாறு சேமித்த பொருளைக் கொண்டு நல் வழிகளில் செலவிடுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட அறவழிகளில் செலவிடுதல் சிறப்பாகும். 3. காமம்: காமம்' என்றசொல் ஆசை என்றுபொருள் படும். இன்று காமம் என்ற சொல் மங்கையர்மீது கொள்ளும் ஆசையை மட்டிலும் குறிப்பிடுகின்றது. இந்த ஆசை இவவுலகு சம்பந்தமுடையது (ஐஹலேளகிகம்), மறு உலகு சம்பந்த முடையது (பரலெளசிகம்) என இருவகைப் படும். முன்னது இன்பம் நல்கும் பொருள்களிலும் இந்திரிய சுகத்தைத் தரும் பொருள்களிலும் ஆசை வைப்பதர்கும். பின்னது, சுவர்க்கம் முதலான உலகங்களில் சென்று பசி தாகம் தொடக்கமானவைகள் அற்று மண்ணுலகில் செய்த நல்வினைகளுக்கீடாக அமுதம் பருகி அப்சர மகளிருடன் இன்பம் அநுபவித்தலாகும். இந்திரியபோகம் முதலியவை இதில் அடங்கும். 4. ஆன்மாநுபவம்: ஆன்மாவை அநுபவித்தலாகும். இது கேவலர்களின் செயலை யொத்தது. ஆன்மாவை அநுபவிப்பவர்கள் பரமபதத்தில் புறப்பகுதிகளில் வசிப்ப வர்களாச் சொல்லப் பெறுவர். 5. பகவதநுபவம்: 'இந்த உலகிலிருக்கும்போது எம் பெருமானை அநுபவித்தலாகும். . வாய்அவளை அல்லது வாழ்த்தாது; கைஉலகம் தாயவனை அல்லது தாம் தொழா பேய்முலைகஞ்சு ஊண்ஆக உண்டான்உருவொடு பேர்அல்லால் - காணா கண் கேளாசெவி. (முதல். திருவந். 1.1) என்பது பொய்கையாழ்வாரின் இறையதுபவம்,