பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மா அடையும் பயன்கள் 71 மகிழ்ந்தது சிந்தை, திருமாலே! மற்றும் மகிழ்ந்தது, உன்பாதமே போற்றி; மகிழ்ந்தது அழல்ஆழி சங்கம் அவையாடி, ஆடும் தொழில்ஆகம் சூழ்ந்து துணிந்து. - (இரண். திருவந், 32) என்பது பூதத்தாழ்வாரின் பரவதநுபவம். உய்த்துஉணர்வு என்னும் ஒளிகொள் விளக்குஏற்றி வைத்து அவனை காடி வலைப்படுத்தேன்; மெத்தெனவே கின்றான் இருந்தான் கிடந்தான்என் நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து. (மூன். திருவந், 94) என்பது பேயாழ்வாரின் இறையநுபவம். இன்று.ஆக, காளையே ஆக இனிச்சிறிது நின்றுஆக நின்அருள் என்பாலதே நன்றாக கரன் உன்னை அன்றிஇலேன் கண்டாப், நரானனே! நீ என்னை அன்றி இலை. (நான். திருவந் 7) என்பது திருமழிசைபிரானின் பகவதநுபவம். தேனும் பாலும் கன்னலும் அமுத ஆகித் தித்திப்ப யானும் எம்பி ரானையே ஏத்தினேன் (திருவாய் 4.3; 10) என்பது நம்மாழ்வாரின் பகவதநுபவம். பரமபதத்தில் பரவாசுதேவனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டிருத்தலும் பகவதநுபவம் ஆகும்.