பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அறநூல் தந்த அறிவாளர்


போப்பையர் பாராட்டு

ஆங்கிலேயரும் கிறித்துவப் பாதிரியாரும் ஆதிய ஜி. யு. போப்பையர் தமிழில் உள்ள கறதால்களை ஓதி உணர்ந்தார். அவற்றின் சிறப்பைக் குறித்து, அவர் கூறியுள்ள கருத்துக்கள் எண்ணி இன்புறத் தக்கனவாகும். ‘தமிழர்கள் உயர்ந்த ஒழுக்கம் உடையார்கள்; அறத்தில் வழுவாத திறம் படைத்தவர்கள்; அதனாலேயே திருக்குறளைப் போன்ற உயர்ந்த அறநூல்கள் தமிழில் உதிது துள்ளன.’ இங்கனம் தமிழரையும் தமிழ் நூல்களையும் பாராட்டிய பாதிரியார், தம்மை ‘ஒரு தமிழ் மாணவன்’ என்றே உலகிற்கு அறிமுகம் செய்ய விரும்பினார். தமிழரின் அறநெறிகளை ஆங்கில மக்களும் பாங்குற மேற்கொண்டு ஒழுகவேண்டும் என்று ஆசை கொண்டார். உலகம் முழுவதும் அவ்வொழுக்கம் பரவவேண்டும் என்றும் எண்ணினார். அதனால் திருக்குறள், நாலடியார் என்னும் இரு நூல்களையும் அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உதவினார். அவர் செய்த பணி, உலகிற்கே பெரிய பயனை விளைப்பதாயிற்று.

சிறுவர்க்குரிய அறநூல்கள்

இவையல்லாமல் பிற்காலத்திலும் பல அறநூல்கள் தோன்றின. அவற்றுள் சிறப்-