பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அறநூல் தந்த அறிவாளர்


லாகத் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் சிறப்பு வாய்ந்தது.

தமிழர் கடமை

மேலும், சதகங்கள் என்று வழங்கும் அறநூல்கள் சில பிற்காலத்தில் எழுந்தன. அவைகளும் சிறந்த நீதிகளை எடுத்து ஓதும் இயல்புடையன. நூறுபாடல்களைக் கொண்ட அந்நூல்கள் ‘சதகம்’ என்று பெயர் பெற்றன. இங்கனம் எண்ணில்லாத நீதி நூல்கள் நம் இன்றமிழ் மொழியில் இருப்பதைக் கண்டு மேல்நாட்டு அறிஞர்கள் வியப்பு அடைகின்றனர். இத்தகைய அறநூல்கள் தோன்றுவதற்கு இடமான தமிழ் நாட்டு மக்கள் ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்றும், அறத்தில் பிறழாதவர் என்றும் போற்றுகின்றனர். இத்தகைய நிலை என்றும் மாறாதவாறு தமிழர் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க முயல்வார்களாக!