பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் அருளிய தெய்வப் புலவர்

13


வரை ‘மதுரைக் கூல வாணிகன் சித்தலைச்சாத்தனர்’ என்று அறிஞர் குறிப்பிடுவர். தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறுதற்கு வரும் நூல்களேயெல்லாம் முதன் முதல் பார்வையிட வேண்டியது அப்புலவரின் வேலை. குறைகள் நிறைந்த நூல்களே மிகுதியாகப் பார்த்தும் கேட்டும் அவருக்குத் தலைக்குத்து நோய் பெரிதும் வருத்தியது. அந்நோயால் துன்புற்ற சாத்தனர் திருக்குறள் நூலைக் கேட்ட அன்றே நோய் நீங்கப் பெற்றார். இவ்வுண்மையை அக்காலத்தில் செந்தமிழ்ப் புலவராகவும் சிறந்த மருத்துவராகவும் திகழ்ந்த மருத்துவன் தாமோதரனார் என்பார் விளக்கியுள்ளார்.

‘மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு’

என்பது அப்புலவரின் வாக்கு ஆகும்.

முப்பாலும் முப்புலவரும்

திருக்குறள் நினைப்பவர் சிங்தைக்கு இனிப்பது; கேட்பவர் செவிகட்கு இனிப்பது; ஒதுவார் வாய்க்கு இனிப்பது; தொடர்ந்து வரும் இருவினைப் பிணியை அறுக்கும் மருந்தாவது என்று கவுணியனார் இந்நூலைப் போற்றினார். திருக்குறளின் நறுஞ்சுவைக்-