பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அறநூல் தந்த அறிவாளர்

 குத் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒப்பாகாது. அத்தெள்ளமுதை உண்டவர் தேவர்களே, ஆனால், திருக்குறள் என்னும் அமுதையோ உலக முழுதும் உண்டு மகிழும் என்று ஆலங்குடி வங்கனார் அகம் மகிழ்ந்து பாராட்டினார். இந்நூலில் எல்லாப் பொருளும் சொல்லப்பட்டுள்ளன. இதில் சொல்லப்படாத பொருள் எதுவுமே இல்லை என்று புகழ்ந்தார் மதுரைத் தமிழ் நாகனார்.

நத்தத்தனார் நல்லுரை

ஒருவன் திருக்குறளில் உள்ள ஆயிரத்து முந்நாற்று முப்பது அரிய குறட்பாக்களையும் ஒதி உணர்ந்தால் போதும்; அவன் வேறொரு நூலைக் கற்கவோ கேட்கவோ வேண்டாம்; அவன் வீறு பெற்ற தமிழ்ப் புலவனாக விளங்கலாம் என்று நத்தத்தனார் என்னும் நற்றமிழ்ப் புலவர் நயம்படக் கூறினார்.

பாணர் பாராட்டு

திருமால் தன் திருவடிகள் இரண்டால் மூவுலகையும் தாவி அளந்தான்; திருவள்ளுவரோ தாம் பாடிய குறள் வெண்பாவின் ஈரடிகளால் உலக மக்கள் உள்ளத்தையெல்லாம் ஆராய்ந்து அளந்தார். இவ்வாறு பரணர், திருவள்ளுவரைப் பாராட்டினார்.