பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் அருளிய தெய்வப் புலவர்

15


திருக்குறள் உரையாசிரியர்கள்

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் நூலுக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே பத்து உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்

‘தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பருதி, பரிமே லழகர், --திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
                 வள்ளுவர் நூற்(கு)
எல்லையுரை செய்தார் இவர்.’

இப்பாட்டால் திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரையும் அறியலாம். இவர்கட்குப் பின்னால் தோன்றிய உரைகளும் பல உள்ளன. இங்கனம் ஒரே நூலுக்குப் பலர் உரை எழுதிய பெருமை, வேறு நூலுக்கு இல்லை. இவ்வுண்மையும் திருக்குறளின் பெருமையை விளக்குவது ஆகும்.

தமிழர் தவக்குறை

அறிவுக் களஞ்சியமாக விளங்கும் திருக்குறள் ஆகிய அறநூலைப் பாடியருளியவர் திருவள்ளுவர் ஆவார். இவரைத் ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ என்றே எல்லோரும் சொல்லுவர். இவரது உண்மை வரலாற்றை நாம் உணர முடியவில்லை. அது தமிழர்