பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அறநூல் தந்த அறிவாளர்


செய்த தவக்குறையே ஆகும். அவ்வாறே பழந்தமிழ்ப் புலவர்கள் பலருடைய வரலாறுகளும் தெரிய வழியில்லை. மேல் காட்டு அறிஞர்கள் தம் வரலாற்றைத் தாமே நூலாக வரைந்து கொடுக்கும் வழக்கம் உடையவர்கள். அவ்வழக்கம் நம் தமிழ்ப் புலவர்களிடம் அமையவில்லை. தம்மைப் பற்றிய வரலாற்றைத் தாமே வரைந்து வைப்பது பெருங்குற்றமாகும் என்று தமிழ்ப் புலவர்கள் எண்ணியிருக்க வேண்டும். அதனால் வந்த கேடே, திருவள்ளுவர் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள முடியவில்லை.

வள்ளுவரைப் பற்றிய கதைகள்

திருவள்ளுவரைப் பற்றி நம் காட்டில் எத்தனையோ கதைகள் வழங்கி வருகின்றன. அவற்றுள் எந்தக் கதைக்கும் எள்ளளவு ஆதாரமும் இல்லே. ஆனல் சில வரலாறுகள் அவருக்குப் பெருமை அளிப்பன; சில வரலாறுகள் மிக்க இழிவைத் தருவன. வள்ளுவர்பால் கொண்ட எல்லையற்ற அன்பின் காரணமாக நல்ல கதைகள் தோன்றியிருக்க வேண்டும். அவர்பால் கொண்ட பொறாமை காரணமாக இழிவைத் தரும் அழிவுக் கதைகளைச் சிலர் புனைந்திருக்க வேண்டும்.