பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. அறம் உரைத்த அன்னயார்

புலவர்களும் வள்ளல்களும்

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கடைச் சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்களை ஆதரித்த அரிய வள்ளல்களும் வாழ்ந்தனர். அவர்களில் புலவர் பாடும் புகழ் உடையவராய்ச் சிறந்து விளங்கியவர் ஏழு பேர்கள் ஆவர். அவர்களைக் 'கடையெழு வள்ளல்கள்' என்று கற்றோர் போற்றுவர். அவ்வெழுவரில் ஒருவன் அதியமான் என்னும் அரசன்.

பாணர் குலத்துப் பாவையர்

அதியமானின் அரசவையில் விளங்கிய புலவர்களில் ஒருவர் ஔவையார். அவர் அவனது அவைப் புலவராக மட்டும் விளங்க வில்லை. அவனுக்கு உற்ற இடத்துத்தக்க அறிவுரையும் அறவுரையும் கூறும் அமைச்சராகவும் விளங்கினார். இத்தகைய ஔவையார் பாணர் மரபில் தோன்றிய பாவையார். ஆவர். பாணர் என்பார் யாழினை இசைத்துப் பண்ணுடன் பாடும் பண்புடைபார். அப்பாணர் குலத்தில் தோன்றிய பெண்களைப் பாடினியர் என்றும் விறலியர்