பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அறநூல் தந்த அநிவாளர்


விட்டது. 'இக்கனியை நாம் உண்ணுவதிலும் இவ்வன்னையார் உண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இவர் நீண்ட காலம் வாழ்வார் உலகிற்கு அரிய உண்மைகளை ஆராய்ந்து உரைப்பார். அதனால் மக்கள் மிக்க நலத்துடனும் வளத்துடனும் வாழ்வார்கள் அல்லவா?' என்று எண்ணினான். உடனே, தன்னை நோக்கி வந்த தமிழ் மூதாட்டியாரை அன்புடன் வரவேற்றான். தன் கையில் இருந்த கனி அவர் கையில் அளித்தான். 'தாயே! இதனைத் தாங்கள் உண்ணுங்கள்' என்று வேண்டினான்.

அமுதக்கனி உண்ட அன்னையார்

வள்ளலின் சொல்லைத் தட்டாத தமிழன்னை அக்கனியை வாயில் இட்டுச் சுவைத்து மென்று தின்றார். அது பிற கனி களைப் போல் அல்லாமல், அரிய சுவை உடையதாக இருந்தது. அமிழ்தினும் இனிய சுவை உடையதாக இருந்தது. அச்சுவையினைத் தெரிந்த பிறகுதான் அதியமானிடம் அதன் அருமையைக் கேட்டு அறிந்தார். அதனை அவன் உண்ணாது, தமக்கு அளித்த உயர்ந்த உள்ளத்தை நினைந்து நினைந்து உருகினார். அவ்வள்ளலின் உயர்ந்த பண்பைச் சிறந்த