பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறம் உரைத்த அன்னையார்

37


தமிழ்ப் பாட்டு ஒன்றால் புகழ்ந்தார். 'பெருமானே! நீ நீல மணிமிடற்றுச் சிவனைப் போல நிலைபெற்று வாழ்க' என்று வாயார வாழ்த்தினார்.

சுந்தார் காலத்தில் ஔவையார்

அதியமான் அளித்த அமுத நெல்லிக் கனியை உண்ட ஒளவையார் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியும்? சைவ சமய ஆசாரியருள் ஒருவராகிய சுந்தரர் காலத்தில் ஔவையார் என்ற பெயருடைய பெண் புலவர் ஒருவர் வாழ்ந்தார். அவர், சுந்தரர் கயிலாயம் செல்லுவதைக் கேள்வியுற்றார். சிவபெருமான் அனுப்பிய வெள்ளை யானையின் மீது ஏறி, அவர் விரைந்து செல்லுவதாகத் தெரிந்தார். அவரைப் பின் தொடர்ந்து, சேரமான் பெருமாள் என்னும் அரசரும் செல்லுவதாகத் தெரிந்தார். அவ்வரசர் குதிரை மீது ஏறிச் செல்லுவதாகவும் செய்தி அறிந்தார்.

ஔவையார் கயிலாயம் அடைதல்

இங்ஙனம் யானை மீதும் குதிரை மீதும் ஏறிச் செல்லும் இருவர்க்கும் முன்னால் ஔவையார் கயிலாயம் சென்று வீட நினைத்தார். அதற்காக விநாயகப் பெருமானை