பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அறநூல் தந்த அறிவாளர்


வேண்டினார். அவ்வாறு வேண்டிப் பாடிய அருள் நூலே 'விநாயகர் அகவல்' என்று கூறப்படுகிறது. ஒளவையாரின் அகவலைக் கேட்டருளிய விநாயகர், அவ்வம்மையாருக்கு அருள்புரிந்தார். சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் முன்னால் அவரைக் கயிலாயம் கொண்டு சேர்த்தார். கயிலாயத்தை அடைந்த ஔவையார், தமக்குப் பின் வந்த இருவரையும் அங்கு வரவேற்றார் என்பர்.

இரண்டாம் ஔவையார்

அதியமான் காலத்திற்கு ஆயிரம் ஆண்டு கட்குப் பின்னால் சுந்தரர் வாழ்ந்தவர். சுந்தரர் காலம் வரை அந்த ஔவையார் வாழ்ந்தார் என்று கொள்ள முடியுமா? அவ்வாறு கொண்டால் ஒருவர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கொள்ள வேண்டும். அவ்வாறு கூறுவதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலின் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவரே.

ஒளவையார் மூவர்

எனவே, ஔவையார் என்ற பெயருடைய பெண் புலவர்கள் இருவரைப் பற்றித் தெரிந்தோம். ஒருவர் அதியமான்