உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறம் உரைத்த அன்னையார்

39


காலத்தில் வாழ்ந்த ஒளவையார்; மற்றொருவர் சுந்தரர் காலத்தில் வாழ்ந்தவர். இவர்கள் இருவரை அல்லாமல், மற்றும் ஓர் ஒளவையார் நானூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்தார். அவரே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய சிறு நூல்களைப் பாடிய செல்வியார்.

வான்கோழியைப் பாடிய ஒளவையார்

பிற்காலத்தில் வாழ்ந்த மூன்றாவது ஔவையார் பாடிய நூல்களில் ஒன்று மூதுரையாகும். அதனை 'வாக்குண்டாம்' என்றும் வழங்குவர். அந்நூலில் 'வான்கோழி' என்ற ஒரு பறவையைப் பற்றி ஒளவையார் குறிப்பிடுகிறார். காட்டில் மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடியது. அக்காட்சியை வான்கோழி ஒன்று கண்டது. அது தன்னையும் மயிலென எண்ணிக் கொண்டு, தன் அழகு இல்லாத சிறகை விரித்து ஆடியது. இவ்விரண்டு பறவைகளும் ஆடுகின்ற காட்சியை ஒளவையார் கண்டார். இதனை உவமையாகக் கொண்டு, அழகான பாட்டு ஒன்றைப் பாடி னார். 'கற்றவன் ஒருவன் கவி பாடினான். அவன் பாடுவதைக் கண்ட முடன் ஒரு-